மாத ராசி பலன் (விருச்சிகம் - March- 2025)

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எந்த வேலையிலும் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் முக்கியமான முடிவையும் மிகவும் யோசித்த பின்னரே எடுக்க வேண்டும். பண பரிவர்த்தனை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் தேக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பல நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்களை சீக்கிரத்தில் முடிக்க முடியும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செய்யவும். மனதில் ஏதாவது குறை இருக்கும். எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. சேமிப்பில் கவனம் செலுத்தினால் பல வகையில் நன்மை அடையலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டு. குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் இருக்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக கையாளவும். உத்யோகத்தில் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் : 7,8,9 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.