வார ராசி பலன் (துலாம் - 03-03-2025 To 09-03-2025)

துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு துணை நிற்பீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் காரணமாக கணவன் மனைவி இடையே சிறிய விரிசல் ஏற்படலாம். உடல் நலனில் அதிக கவனம் தேவை. எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும். வாகனத்தில் எப்போதும் மித வேகத்தை பின்பற்றவும். எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். வெளிநபர்களிடம் அனுசரித்து செல்வது பல வகையில் நன்மை தரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டாகும். தொழில், வியபாரம் சூடு பிடிக்கும். பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்