வார ராசி பலன் (சிம்மம் - 03-03-2025 To 09-03-2025)

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, சற்றும் எதிர்பாராத வகையில் பண வரவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. வீண் செலவுகள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். கடன் தொந்தரவை ஓரளவு சமாளிக்க முடியும். நெருங்கிய உறவினர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்திற்காக நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்