மாத ராசி பலன் (சிம்மம் - March- 2025)

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் திட்டமிட்ட பணிகளை பொறுமையுடன் முடிக்க முயற்சிக்க வேண்டும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சுற்றி இருப்பவர்களுடன் இருந்தகருத்து மோதல்கள் நீங்கும். குடும்ப நபர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். நீங்கள் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். குடும்பத்தில் செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உற்றார், உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு. புதிய வண்டி, வாகனங்களை வாங்க முடியும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். கோர்ட் வழக்கில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கிடைக்க வேண்டிய நல்லது அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்கும். குடும்பத்தில் பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். அடிக்கடி பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். வேலை தொடர்பாக நீண்ட அல்லது குறுகிய தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து பெரிய லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். சந்திராஷ்டமம் : 1,2,3 & 28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.