வார ராசி பலன் (மிதுனம் - 03-03-2025 To 09-03-2025)

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பொறுப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டி இருக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர் வருகையால் வீடு களைகட்டும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெற வாய்ப்புள்ளது. கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். சில நேரங்களில் குடும்ப பாரம் காரணமாக அமைதி குறையலாம். பெரியோர்களின் தலையீட்டால் குடும்ப பிரச்சனைக்கு தீர்வு வரும். உத்யோகத்தில் வேலைபளு கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்