மாத ராசி பலன் (மிதுனம் - March- 2025)

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, திட்டமிட்ட பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எந்தவொரு வேலையையும் அடுத்த நாள் வரை தள்ளி வைக்க வேண்டாம். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். எதிர்பார்க்கும் காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். உங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். போதிய வருமானம் தங்கு தடையின்றி கிடைக்கும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்யவும். ஆன்மீக காரியங்களில் நாட்டம் உண்டாகும். குடும்பத்தினருடன் சென்று பிராத்தனையை செய்யவும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வேண்டியவர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வர தாமதமாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிரியமானவர்கள் வழியில் சில அனுகூலமான பலன் உண்டு. நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகவும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தேவையற்ற இடத்திற்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். . சந்திராஷ்டமம் : 24,25,26 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.