வார ராசி பலன் (மேஷம் - 03-03-2025 To 09-03-2025)

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் பலன்படி, மனதில் இருந்த குழப்பங்களும், கவலைகளும் நாளடைவில் சீராகும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிறிது சிரமம் ஏற்படும். உணவு கட்டுப்பாடு மூலம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். தடைபட்டு வந்த திருமண காரியம் சட்டென்று கைக்கூடும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது அவசியம். உடன்பிறப்புகளால் செலவுகளும், விரயங்களும் ஏற்படலாம். மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். வெளியுலகில் உங்கள் மதிப்பு, கௌரவம் கூடும். உத்யோகத்தில் பெரியளவில் மாற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தள்ளி போடவும். பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்