மாத ராசி பலன் (மேஷம் - March- 2025)

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, கலவையான பலன்களைத் எதிர்பார்க்கலாம். திட்டமிட்ட பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து நல்ல தகவல் ஒன்று வரும். மனக்கவலைகள் அடியோடு மறையும். குடும்பத்தில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். உங்கள் வங்கி கணக்கில் பணம் உயரும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போவது சிறப்பு. உறவினர்களிடம் பண விஷயத்தில் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்கள் விருப்பங்களை எதுவாகினும் அது நிறைவேற்ற வழி கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சூழ்நிலைகள் சாதகமாக மாறுவதைக் காணலாம். உத்யோகம் தொடர்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களை தேவையற்ற இடத்திற்கு மாற்ற வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். சந்திராஷ்டமம் : 19,20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ, செய்யவோ வேண்டாம்.