வார ராசி பலன் (மீனம் - 03-03-2025 To 09-03-2025)

மீனம்
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல நல்ல வாய்ப்புகள் வரும். உடன்பிறப்பு வகையில் ஏதாவது மனக்கவலை ஏற்பட்டு மறையும். யாருக்கும் பணம் தொடர்பாக வாக்குறுதி தர வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் விரும்பியது போல் எல்லாம் நடக்கும். பூர்விக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். திருமண முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிபடவும்