மாத ராசி பலன் (மீனம் - March- 2025)

மீனம்
மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம். எல்லா விஷயங்களிலும் நிதானத்தை கடை பிடிக்க வேண்டியது அவசியம். மனதில் ஒரு விதமான குழப்பங்கள் நிலவினாலும் அது நாளடைவில் சரியாகிவிடும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் முக்கிய நிகழிச்சிகள் நடக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் தூர பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பயணங்கள் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். புது நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் கிட்டும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக திடீர் பயணங்கள் ஏற்படும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் உயர் நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.