வார ராசி பலன் (மகரம் - 03-03-2025 To 09-03-2025)

மகரம்
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்ய முடியும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்யவும். குடும்பத்தில் திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது நபர்களின் அறிமுகமும் ஆதரவும் கிட்டும். உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துகொள்ளவும். முக்கிய நேரங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. அயல்நாடு செல்லும் விருப்பம் நிறைவேறும். பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கூட்டு, தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்