வார ராசி பலன் (கும்பம் - 03-03-2025 To 09-03-2025)

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இந்த வார பலன் படி, உங்கள் கஷ்டங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். கடன் பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வழி கிடைக்கும். ஏற்கனவே வாங்கிய பழைய கடனை அடைக்க முடியும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மீக காரியங்களுக்காக பணம் நிறைய செலவாகும். திருமணம் வயதில் உள்ளவர்களுக்கு வரன்கள் கைகூடி வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வகையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்