வார ராசி பலன் (கன்னி - 03-03-2025 To 09-03-2025)

கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, பேச்சு திறமையால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மன நிறைவு உண்டாகும். அடுத்தவர்களின் ஆலோசனைகளை அளவோடு எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. பல புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க விரும்புவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். குடும்ப நபர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். பரிகாரம் : குலதெய்வத்தை வணங்கி வழிபடவும்