வார ராசி பலன் (கடகம் - 03-03-2025 To 09-03-2025)

கடகம்
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மற்றவர்களிடம் பழகும்போது வார்த்தையில் பொறுமையும் நிதானத்தையும் பின்பற்றுவது நன்மை தரும். விஐபிகளின் தொடர்பு கிட்டும். குடும்ப வருமானம் போதுமானதாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். வீடு, வாகன யோகம் உண்டாகும். கணவன் மனைவிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். சில எதிர்பாராத சூழ்நிலை காரணமாக கடன் வாங்க நேரிடும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் போட்டியாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்