வார ராசி பலன் (தனுசு - 03-03-2025 To 09-03-2025)

தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, நெருங்கிய உறவினர்களிடம் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நல்ல முறையில் செயல்படும்; வெற்றியடையும். புதிய முயற்சிக்காக பல புதிய நபர்களை சந்திக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப பொருளாதாரம் வெகுவாக உயரும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில், வியபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்