மாத ராசி பலன் (தனுசு - March- 2025)

தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு எதிராக நின்றவர்கள் கூட ஆதரவாக இருப்பர். ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக அளவு பணம் செலவிட நேரிடும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு பல யோசித்து செய்வது நல்லது. எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் உடல் மேன்மை பெரும். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி விடும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். அடுத்தவர் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக செய்ய முடியும். மற்றவர்களை கவரும் திறமை உங்களிடம் நிறைவே இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேலை செய்பவர்களுக்கு தங்கள் மேலதிகாரிகளுடன் மோதல்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும். சந்திராஷ்டமம் : 9,10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.